திருநெல்வேலி மாநகராட்சி சார்பில் மேலப்பாளையம் மண்டலத்தில் 5 ஆயிரம் பேருக்கு கரோனா தடுப்பூசி நேற்று போடப்பட்டது.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் வே. விஷ்ணு, மாநகராட்சி ஆணையர் விஷ்ணு சந்திரன் ஆகியோரின் உத்தரவின்பேரில் மேலப்பாளையம் மற்றும் பெருமாள்புரம் நகர்நல மையத்தின் சார்பில் மேலப்பாளையம் மண்டலத்தில் 39 இடங்களில் நேற்று கரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. இந்த முகாம்களில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. 2 நடமாடும் வாகனங்கள் மூலமும் தடுப்பூசி போடப்பட்டது. இந்த முகாம் ஏற்பாடுகளை மாநகர நல அலுவலர் ராஜேந்திரன், மண்டல நல அலுவலர் சாகுல் ஹமீது, சுகாதார ஆய்வாளர் நடராஜன் ஆகியோர் செய்திருந்தனர்.