Regional02

அம்பாசமுத்திரம், பணகுடி பகுதியில் - சூறைக் காற்றில் வாழைகள் சேதம் :

செய்திப்பிரிவு

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம், பணகுடி பகுதிகளில் வீசிய சூறைக் காற்றில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழைகள் சேதமடைந்தன.

திருநெல்வேலி மாவட்டத்தில் களக்காடு, திருக்குறுங்குடி, பணகுடி, அம்பாசமுத்திரம், வி.கே. புரம் பகுதிகளில் கடந்த சில நாட்களாக சூறைக் காற்று வீசுகிறது. இதனால் பல்வேறு இடங்களிலும் விவசாயிகள் பயிரிட்டிருந்த வாழைகள் சாய்ந்து பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. அம்பாசமுத்திரம் அருகே வி.கே.புரத்தில் வீசிய சூறைக்காற்றில் சுற்றுவட்டார பகுதிகளில் பயிரிட்டிருந்த 10 ஆயிரம் வாழைகள் முறிந்து விழுந்தன. இதுபோல பணகுடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான தளவாய்புரம், கீழப்புதூரில் சூறைக்காற்றால் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழைகள் சேதமடைந்துள்ளன. சேதமடைந்த வாழைகள் குறித்துவேளாண்மை மற்றும் வருவாய்த்துறையினர் கணக்கிட்டு உரிய இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT