Regional02

உதகை அரசு மருத்துவக் கல்லூரி : கட்டுமானப் பணிகளை எம்.பி. ஆய்வு :

செய்திப்பிரிவு

நீலகிரி மாவட்டம் உதகையில் ரூ.447.32 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டிடப் பணிகளை நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா ஆய்வு செய்தார். அதன்பின்பு அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது ‘‘உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டுமானப் பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. இந்த கல்வியாண்டில் (2021-2022) 150 மாணவர்களை சேர்ப்பதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதற்கேற்ப பணிகளை துரிதப்படுத்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது’’ என்றார்.

ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா, உதகை சார்-ஆட்சியர் மோனிகா ராணா, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் மனோகரி, பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் கிருஷ்ணசாமி உட்பட பலர் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT