மூத்த குடிமக்களுக்கு சட்டரீதியான பாதுகாப்பை உறுதிசெய்யும் பொருட்டு கட்டணமில்லா உதவி எண். 14567 வசதி தொடங்கப்பட்டுள்ளது.
முதியோர் உதவி மையத்தின் இந்த எண்ணைத் தொடர்பு கொண்டு முதியோர் இல்லங்கள், பராமரிப்புமையம், பராமரிப்பாளர்கள், மருத்துவ ஆலோசனை வழங்கும் இடங்கள்., வலி நிவாரண மையங்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம். முதியோருக்கான அரசு திட்டங்களைப் பெறும் சட்ட வழிமுறைகள், பராமரிப்பு சட்டம் குறித்த வழிகாட்டுதல்களைப் பெறலாம்.
மனதளவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆலோசனை மற்றும் ஆதரவு அளித்தல், ஆதரவற்ற, இடரில் உள்ள முதியோர் மீட்பு, குடும்ப உறுப்பினர்கள் அல்லது பிறரால் துன்புறுத்தப்படும் முதியோர்களுக்கு ஆதரவு அளித்து பிரச்சினைகளைத் தீர்க்க வழிகாட்டுதலும் இந்த மையத்தின் மூலம் வழங்கப்படும். கட்டணமில்லா உதவி எண்ணை (14567) அனைத்து நாட்களிலும் காலை 8 மணிமுதல் இரவு 8 மணி வரை தொடர்பு கொண்டு மூத்த குடிமக்கள் உதவிகளைப் பெறலாம் என ஈரோடு மாவட்ட சமூகநலத்துறை தெரிவித்துள்ளது.