Regional02

பறிமுதல் வாகனங்கள் அக். 3-ல் ஏலம் :

செய்திப்பிரிவு

காஞ்சிபுரம் மாவட்ட மதுவிலக்கு அமல் பிரிவு சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கை:

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மதுவிலக்கு வழக்குகளில் சம்பந்தப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ள வாகனங்கள் வரும் அக். 3-ம் தேதி காலை 10 மணிக்கு ஏலம் விடப்பட உள்ளன.

வாகனங்களை ஏலம் கேட்பவர்கள் முன் வைப்புத் கட்டணத் தொகையாக ரூ.1000 செலுத்த வேண்டும்.

வாகனத்தை ஏலம் எடுத்தவர்கள் ஏல தொகையுடன் விற்பனை வரி செலுத்த வேண்டும். வாகனத்தின் விவரம் மற்றும் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச மதிப்பீட்டு தொகை காஞ்சிபுரம் எஸ்பி அலுவலகம் மற்றும் காஞ்சிபுரம் மதுவிலக்கு அமல்பிரிவு அலுவலக தகவல் பலகைகளில் ஒட்டப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT