Regional02

மரக்காணம் அருகே உரிய ஆவணம் இல்லாத - 2 ஆயிரம் லிட்டர் டீசல் பறிமுதல் :

செய்திப்பிரிவு

மரக்காணம் அருகே ஆலத்தூர் கூட்டு ரோடு பகுதியில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் செந்தில்வடிவு தலைமையிலான அதிகாரிகள் நேற்று வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது செங்கல்பட்டு மாவட் டம் கடப்பாக்கம் பகுதியில் இருந்து ஒரு மினி வேன் வந்தது. அதில், 10 பேரல்களில் 2 ஆயிரம் லிட்டர் டீசல் இருந்தது. அதற்கான ஆவணம் இல்லை. வேன் டிரைவரிடம் விசாரனை நடத்தியதில், அவர் கடப்பாக்கம் பகுதியில் உள்ள கோட்டைக்காடு கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் [40] என்பதும், காஞ்சிபுரம் மாவட்ட மீனவர்களுக்கு அரசு மூலம் மானிய விலையில் வழங்கி டீசலை முறைகேடாக வாங்கிச் சென்று, திண்டிவனம் பகுதியில் செயல்படும் கல்குவாரிகளுக்கு விற்பனை செய்யப்படுவதும் தெரிய வந்தது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

SCROLL FOR NEXT