Regional02

மேலப்பாளையம் கால்நடை சந்தையில் கூட்டம் :

செய்திப்பிரிவு

திருநெல்வேலி மேலப்பாளையத்தில் செவ்வாய்க்கிழமை களில் கால்நடை சந்தை கூடுகிறது. இச்சந்தையில் வரும் 1-ம் தேதி முதல் கட்டண உயர்வை திருநெல்வேலி மாநகராட்சி அறிவித்துள்ளது. இந்நிலையில், நேற்று செவ்வாய்க்கிழமை கால்நடைச் சந்தை கூடியது. உள்ளூர் மற்றும் வெளியூரைச் சேர்ந்த வியாபாரிகள் ஆடு, மாடு, கோழி, கருவாடு உள்ளிட்டவற்றை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதுபோல கால்நடைகளை வாங்குவோரும் பெருமளவில் திரண்டிருந்தனர். இதனால் சந்தையில் பெரும் கூட்டம் காணப்பட்டது. அவர்களில் பெரும் பாலானோர் முகக்கவசம் அணியவில்லை. மாநகராட்சி அலுவலர்கள் அங்குவந்து அனைவரும் முகக்கவசம் அணியுமாறு அறிவுறுத்தியும், பலரும் அதை பொருட்படுத்த வில்லை. இதனால் கரோனா அச்சம் நிலவியது.

SCROLL FOR NEXT