Regional01

இந்தோ - திபெத் காவல் படையினர் அக்.4 முதல் 9 வரை வீரமலைப்பாளையத்தில் துப்பாக்கிச் சுடும் பயிற்சி :

செய்திப்பிரிவு

திருச்சி மாவட்டம் வீரமலைப்பாளையத்தில் அக்.4 முதல் 9-ம் தேதி வரை துப்பாக்கிச் சுடும் பயிற்சி நடைபெறவுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் அணியாப்பூர் கிராமம் வீரமலைப்பாளையத்தில் துப்பாக்கி சுடும் பயிற்சி தளம் உள்ளது. இங்கு அக்.4-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை காலை 7.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை இந்தோ திபெத்திய காவல் படையினரால் துப்பாக்கிச் சுடும் பயிற்சி மேற்கொள்ளப்படவுள்ளது. எனவே, இந்த பயிற்சி தளத்தில் மனித நடமாட்டம் இருக்கக் கூடாது எனவும், கால்நடைகளை மேய்ச்சலுக்கு கொண்டு செல்லக் கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT