Regional03

பள்ளிசாரா, வயது வந்தோர் கல்வி இயக்க சமுதாய விழிப்புணர்வு நிகழ்ச்சி :

செய்திப்பிரிவு

கரூர் மாவட்ட பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கம் சார்பில் கற்போம் எழுவோம் இயக்கம் சார்பில் சமுதாய விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒருங்கிணைந்த பள்ளி கல்வி உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் பக்தவச்சலம் தலைமையில் வெள்ளியணை அரசு மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடைபெற்றது. இதில் கலைநிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

உதவி அலுவலர் மகாலிங்கம், தாந்தோணி வட்டார கல்வி அலுவலர் பழனிராசு, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாண்டீஸ்வரி, வெள்ளியணை தலைமை ஆசிரியர்கள் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தர்மலிங்கம், அரசு மேல்நிலைப் பள்ளி முத்துசாமி, மேற்பார்வையாளர் தமிழரசு, பள்ளி மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். வெள்ளியணை தொடங்கி பி.உடையாபட்டி வரை 12 இடங்களில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

SCROLL FOR NEXT