திருச்சி மாநகரில் கஞ்சா விற்பவர்களை கைது செய்ய தனிப்படை அமைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதன்படி எடமலைப்பட்டிபுதூர் மில்காலனி பகுதியில் கஞ்சா விற்பனை செய்த கொத்தமங்கலத்தைச் சேர்ந்த முத்துராமன்(45), பொன்மலை முன்னாள் ராணுவ காலனியில் கஞ்சா விற்பனை செய்த அரியமங்கலம் காமராஜர் தெருவைச் சேர்ந்த பிரபாகரன் (30), எஸ்.ஐ.டி பகுதியில் விற்பனை செய்த அரியமங்கலம் அற்புதசாமிபுரத்தைச் சேர்ந்த நாகேந்திரன் (23), கீழப்புதூரில் விற்பனை செய்த கீழப்புதூர் அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த அன்பழகன் (21), பாண்டித்துரை (23), காஜாப்பேட்டையைச் சேர்ந்த வர்கீஸ்ராஜ் மனைவி மதலைமேகலைமேரி (39) ஆகிய 6 பேரை நேற்று முன்தினம் தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.