Regional01

தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் அக்.2-ல் - பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி :

செய்திப்பிரிவு

தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு வரும் அக்டோபர் 2-ம் தேதி பேச்சுப் போட்டி நடைபெறவுள்ளது.

இதுதொடர்பாக நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

அக்டோபர் 2-ம் தேதி மகாத்மா காந்தி பிறந்த நாளை முன்னிட்டு, தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரி, பள்ளி மாணவர்களுக்குத் தனித்தனியே பேச்சுப் போட்டி நடத்தப்படுகிறது.

போட்டியில் பங்குபெறும் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு தலா ரூ.5 ஆயிரமும், 2-ம் பரிசு ரூ.3 ஆயிரமும், மூன்றாம் பரிசு ரூ.2 ஆயிரமும் வழங்கப்பட உள்ளது.

மேலும், பள்ளி மாணவர்களுக்கு நடக்கும் போட்டியில் பங்கேற்கும் மாணவர்களில் அரசுப் பள்ளி மாணவர்கள் இரண்டு பேரைத் தனியாகத் தேர்வு செய்து ஒவ்வொருவருக்கும் சிறப்பு பரிசுத் தொகை ரூ.2 ஆயிரம் வழங்கப்படும். பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி வரும் அக்.2-ம் தேதி காலை 10 மணிக்கும், அன்று மதியம் 3 மணிக்கு கல்லூரி மாணவர்களுக்கான போட்டி நடைபெறவுள்ளது. போட்டி நாமக்கல் அரசு தெற்கு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடத்தப்படவுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT