விவசாயிகள் சங்கங்கள் மற்றும் ஏஐடியூசி, சிஐடியு, எல்பிஎப், எச்எம்எஸ் உள்ளிட்ட தொழிற்சங்கத்தினர், திமுக , காங்கிரஸ், மதிமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் ஈரோட்டில் 12 இடங்களில் மறியல் நடந்தது. ஈரோடு காளைமாடு சிலை அருகே திரண்ட போராட்டக்காரர்கள், ரயில் நிலையம் நோக்கி கோஷமிட்டவாறு வந்தனர். அப்போது, வாயிலில் வைத்து போலீஸார் கைது செய்தனர்.
இதேபோல், பெருந்துறை, சென்னிமலை ,கொடுமுடி, மொடக்குறிச்சி, பவானி, அந்தியூர், கோபி, சத்தியமங்கலம், நம்பியூர், புஞ்சைபுளியம்பட்டி, தாளவாடி உண்ட 11 இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. மாவட்டம் முழுவதும் மறியலில் ஈடுபட்ட 784 பேர் கைது செய்யப்பட்டனர். மறியல் போராட்டம் காரணமாக ஈரோடு மாவட்டத்தில் இயல்பு வாழ்க்கையில் எவ்வித பாதிப்பும் இல்லை. பேருந்துகள் வழக்கம்போல் இயங்கின. கடைகள் அனைத்தும் திறந்திருந்தன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.