Regional01

கொளத்தூர் அருகே - யானை தாக்கி சிகிச்சை பெற்ற காவலாளி உயிரிழப்பு :

செய்திப்பிரிவு

கொளத்தூர் அருகே காட்டு யானை தாக்கி சிகிச்சை பெற்று வீடு திரும்பிய காவலாளி உயிரிழந்தார்.

சேலம் மாவட்டம் கொளத்தூர் அடுத்த லக்கம்பட்டி, பெருமாள் கோயில் நத்தம் பகுதியைச் சேர்ந்தவர் தேவராஜ் (38). இவருக்கு திருமணமாகவில்லை. இவர் அதே பகுதியில் உள்ள கொத்தனேரி மீன் வளர்ப்பு பண்ணையில் இரவு காவல் பணியில் ஈடுபட்டு வந்தார்.

இவர் கடந்த மாதம் 14-ம் தேதி இரவு பணியில் ஈடுபட்டிருந்தபோது, காட்டு யானை தாக்கியது. இதில், அவர் பலத்த காயம் அடைந்து, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த சில நாட்கள் உடல் நலம் தேறி வீட்டில் ஓய்வில் இருந்து வந்தார். இந்நிலையில், தேவராஜ் நேற்று முன்தினம் உயிரிழந்தார். இது குறித்து வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT