Regional01

சேலத்தில் கஞ்சா விற்ற 4 பேர் கைது :

செய்திப்பிரிவு

சேலத்தில் கஞ்சா விற்பனை செய்த 4 பேரை போலீஸார் கைது செய்தனர். மேலும், 2 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

சேலம் அம்மாப்பேட்டை, வீராணம் பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. வீராணம் போலீஸ் எஸ்ஐ சித்தன் தலைமையிலான போலீஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அல்லிக்குட்டை ஏரி பகுதியில் கஞ்சா விற்பனை செய்த வீராணம் தாதம்பட்டியைச் சேர்ந்த இளவரசன் (20) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

அம்மாப்பேட்டை பகுதியில் போலீஸ் எஸ்ஐ கிருஷ்ணமூர்த்தி தலைமையில் போலீஸார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, நஞ்சம்பட்டி பேருந்து நிறுத்தம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த அஸ்தம்பட்டி அருண்நகரைச் சேர்ந்த  நாத் (23), அம்மாப்பேட்டை காமராஜர் நகர் தெருவைச் சேர்ந்த வீரப்பன் (20) ஆகிய இருவரை கைது செய்தனர். மேலும், ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

அதேபோல, பள்ளப்பட்டி ஏரிப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்த மெய்யனூர் பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்த பூபதி (35) என்பரை கைது செய்த போலீஸார், அவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

SCROLL FOR NEXT