திருநெல்வேலி மாவட்டம் கொடுமுடியாறு அணைப்பகுதியில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி 35 மி.மீ. மழை பதிவாகியிருந்தது. இதுபோல பாபநாசத்தில் 10 மி.மீ., சேர்வலாறில் 6 மி.மீ., ராதாபுரத்தில் 5 மி.மீ. மழை பெய்திருந்தது. 143 அடி உச்ச நீர்மட்டம்கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம்79.75 அடியாக இருந்தது. அணைக்குவிநாடிக்கு 1,904 கனஅடி தண்ணீர்வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 609 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. 118 அடிஉச்சநீர்மட்டம் கொண்ட மணிமுத்தாறுஅணை நீர்மட்டம் 62.90 அடியாகஇருந்தது. அணைக்கு விநாடிக்கு 15 கனஅடி தண்ணீர் வந்துகொண்டிருந்தது.
தென்காசி
குண்டாறு அணை தொடர்ந்து முழுகொள்ளளவில் உள்ளது. கடனாநதி அணை நீர்மட்டம் 64 அடியாகவும், ராமநதி அணை நீர்மட்டம் 61 அடியாகவும், கருப்பாநதி அணை நீர்மட்டம் 53.48 அடியாகவும், அடவிநயினார் அணை நீர்மட்டம் 122 அடியாகவும் இருந்தது. மலைப்பகுதியில் பெய்த மழையால் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.