Regional02

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு :

செய்திப்பிரிவு

தூத்துக்குடி பாரதியார் வித்யாலயம் மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி நிர்வாகக்குழு உறுப்பினர் ஏ.பி.சி.வி.கணபதி தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் தட்சிணாமூர்த்தி வரவேற்றார். மருத்துவர்கள் ஹெச்.பிலிப்,வேல் ராமலிங்கம், பத்மநாபன், தொழிலதிபர் ராஜா குமார் ஆசிர்வாதம், ஆவுடையப்பன், மான்ராஜா, மணிராஜ் ஆகியோர்முன்னாள் தலைமை ஆசிரியர்களின் புகைப்படங்களை திறந்து வைத்து பேசினர்.

நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர் சங்கம் அமைத்து, அதன் மூலம் பள்ளியின் ஆய்வகங்களை நவீனப்படுத்துவது, விளையாட்டு மைதானத்தை சீரமைப்பது, சுற்றுச்சுவரை வலுப்படுத்தி நுழைவு வாயிலை அழகுபடுத்துவது, மாணவர் சேர்க்கைக்கு உதவுவது என முடிவு செய்யப்பட்டது. பல்வேறு துறைகளை சேர்ந்த முன்னாள் மாணவர்கள்பலர் கலந்துகொண்டனர். பாலசுந்தர கணபதி நன்றி கூறினார்.

SCROLL FOR NEXT