தி.மலை ஆட்சியர் அலுவலகம் முன்பு தற்கொலைக்கு முயன்ற பரமசிவம் குடும்பத்தினர் மீது தண்ணீரை ஊற்றி காப்பாற்றிய காவல் துறையினர்.படம்: இரா.தினேஷ்குமார். 
Regional01

தி.மலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு - ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் தீக்குளிக்க முயற்சி :

செய்திப்பிரிவு

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் வட்டம் காந்த பாளையம் அடுத்த சினந்தல் கிராமத்தில் வசிப்பவர் பரமசிவம். இவர், தனது தாய் சரோஜா, மனைவி சுதா, மகள்கள் பவானி, பவித்ரா, வெண்ணிலா, ரஞ்சிதா, மகன் சரவணன் மற்றும் உறவினர் வினோத் ஆகிய 9 பேருடன் தி.மலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு நேற்று காலை வந்தனர்.

பின்னர் அவர்கள் அனைவரும், தங்களது உடலில் மண்ணெண் ணெணை ஊற்றிக்கொண்டு ‘நீதி வேண்டும்’ என்ற முழக்கத்துடன் தர்ணாவில் ஈடுபட்டனர். இதை யறிந்த காவல் துறையினர், அவர்களது உடலில் தண்ணீரை ஊற்றி பாதுகாத்தனர். அதன்பிறகு விசாரணை நடத்தினர்.

அப்போது பரமசிவம் கூறும் போது, “எனது தந்தை சிதம்பரம் காலத்தில் இருந்து சினந்தல் கிராமத்தில் உள்ள 1.15 ஏக்கர் நிலத்தில், கடந்த 25 ஆண்டுகளாக விவசாயம் செய்து வருகிறோம். இந்நிலையில், அருகாமையில் உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர்கள் எங்களது நிலத்தை அவர்களுக்கு சொந்தம் என கூறுகின்றனர். மேலும் அவர்கள், இந்த இடத்தில் இருந்து எங்களை வெளியேற வலியுறுத்தி தாக்குதல் நடத்துகின்றனர்.

இதுகுறித்து கடலாடி காவல் நிலையத்தில் புகார் அளித்தும் பலனில்லை. எங்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, எங்களது விவசாய நிலத்தை அரசாங்கம் பதிவேட்டில் பதிவேற்றம் செய்து கொடுக்க வேண்டும்” என்றார்.

இதையடுத்து அவர்கள் அனை வரும், மாவட்ட வருவாய் அலுவலர் முத்துகுமாரசாமியை சந்தித்து முறையிட்டனர்.

கிராம மக்கள் மனு

பின்னர் அவர்கள் கூறும்போது, “செங்கம் அடுத்த கொட்டகுளம் கிராமத்தில் கடந்த 2004-ம் ஆண்டு 35 குடும்பங்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் வீடு கட்டி, பலர் வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கு வழங்கப்பட்ட பட்டா குறித்து வட்ட மற்றும் கிராம கணக்கில் பதிவேற்றம் செய்யவில்லை. இந்நிலையில், அதே இடத்தை கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு, 37 பேருக்கு பட்டா வழங்கப் பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், எங்களுக்கு வழங்கப் பட்டுள்ள பட்டா விவரத்தை வட்ட மற்றும் கிராம கணக்கில் பதிவேற்றம் செய்ய வேண்டும். மேலும், அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். வீடுகளுக்கு வீட்டு வரி ரசீதும் வழங்க வேண்டும்” என்றனர்.

செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு

SCROLL FOR NEXT