Regional02

வெல்டிங் இயந்திரம் வெடித்து ஒருவர் உயிரிழப்பு, 3 பேர் காயம் :

செய்திப்பிரிவு

ஈரோடு மாவட்டம் அந்தியூரைச் சேர்ந்தவர் தீபக். இவரது வீட்டுக்கு முன்பு கூரை அமைக்கும் பணியில், சங்கராபாளையத்தைச் சேர்ந்த வெற்றிவேல் (35) ஈடுபட்டார். அவருடன் உறவினர்கள், முருகன், விமலானந்த் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது திடீரென வெல்டிங் இயந்திரம் வெடித்தது. இதில், வெற்றிவேல் உயிரிழந்தார். முருகன், விமலானந்த் மற்றும் வீட்டு உரிமையாளரின் மனைவி பிரியா ஆகியோர் காயமடைந்தனர்.

வெள்ளித்திருப்பூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT