Regional02

கரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு ஆயுள் காப்பீடு பத்திரம் :

செய்திப்பிரிவு

குமராட்சி ஊராட்சியில் நேற்று 3-வது மெகா கரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. ஊராட்சி மன்றத்தலைவர் தமிழ்வாணன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக கடலூர் உதவி ஆட்சியர் ஜெயராஜா பவுலின் கலந்து கொண்டு தடுப்பூசி முகாமை தொடக்கி வைத்தார். இந்த ஊராட்சியில் 3-வது தடுப்பூசி முகாமான நேற்று தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் 10 பேரை குலுக்கல் முறையில் தேர்வு செய்து அவர்களுக்கு இந்தியன் வங்கியில் ஆயுள் காப்பீடு செய்து அதன் பத்திரம் வழங்கப்படும் என்று ஊராட்சி சார்பில் ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்வாணன் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

SCROLL FOR NEXT