Regional02

இலங்கைக்கு கடத்த இருந்த 3,010 கிலோ மஞ்சள் பறிமுதல் :

செய்திப்பிரிவு

மண்டபம் அருகே இலங்கைக்கு கடத்துவதற்காக விரலி மஞ்சள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகப் போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.

கியூ பிரிவு போலீஸாரும், மண்டபம் போலீஸாரும் வேதாளை கிராமம் தெற்குத் தெரு பள்ளிவாசல் பகுதியில் பூட்டிய வீட்டின் அருகே உள்ள சுற்றுச்சுவர் பகுதியில் சோதனை செய்தனர். அங்கு சாக்கு மூட்டைகளில் 3,010 கிலோ விரலி மஞ்சள் பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது. அதை பறிமுதல் செய்த போலீஸார், வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

SCROLL FOR NEXT