சிவகங்கையில் நடைபெற்ற புத்தக திருவிழாவில் எழுத்தாளர் அ.ஈஸ்வரன் எழுதிய ‘நம்மை நாம் அறிவோம்’ என்ற நாடக நூலை வெளியிட்ட தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் நாகராசன். 
Regional02

சிவகங்கையில் புத்தக திருவிழா :

செய்திப்பிரிவு

சிவகங்கை டிகேஏ மகாலில் பாரதி புத்தகாலயம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் புத்தகத் திருவிழா நடக்கிறது. தொடக்கவிழாவுக்கு வரவேற்புக் குழுத் தலைவர் பாண்டி தலைமை வகித்தார். செயல் தலைவர் காளிராசா வரவேற்றார். மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி விழாவைத் தொடங்கி வைத்தார். கிளைத் தலைவர் தங்கமுனியாண்டி, செயலாளர் செல்லப்பாண்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து மாலையில் நூல் வெளியீட்டு விழா நடந்தது. இதில் எழுத்தாளர் அ.ஈஸ்வரன் எழுதிய ‘நம்மை நாம் அறிவோம்’ என்ற நாடக நூல் வெளியிடப்பட்டது. தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் நாகராசன் நூலை வெளியிட, அதை நேரு இளையோர் மைய ஒருங்கிணைப்பாளர் பிரவீன் குமார், மாவட்ட மைய நூலகர் தவமணி பெற்றுக் கொண்டனர். ஆசிரியர் மாலா, மாவட்டச் செயலாளர் சங்கர சுப்ரமணியன், எழுத்தாளர் ஈஸ்வரன் உள்ளிட் டோர் பங்கேற்றனர். புத்தகத் திருவிழா செப்.30 வரை காலை 10 முதல் இரவு 9 வரை நடக்கிறது.

SCROLL FOR NEXT