Regional02

ஐடிஐ படித்தவர்களுக்கு தொழிற்பழகுநர் பயிற்சி முகாம் :

செய்திப்பிரிவு

ஐடிஐ படித்தவர்களுக்கு மாவட்ட அளவிலான தொழிற்பழகுநர் பயிற்சிமுகாம் நடைபெற உள்ளது.

பல்வேறு தொழிற் பிரிவுகளைச் சேர்ந்த பயிற்சியாளர்களுக்கு தொழிற்பழகுநர் பயிற்சி (அப்ரண்டீஸ்) வழங்குவதற்காக, மாவட்ட அளவிலான தொழிற்பயிற்சி முகாம் வரும் அக். 4-ம் தேதி அம்பத்தூரில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெறுகிறது.

மத்திய, மாநில அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்புகளைக் கொண்டு நடத்தப்படும் மாவட்ட அளவிலான இந்த தொழிற்பழகுநர் பயிற்சி முகாமில், ஐடிஐ பயிற்சி முடித்த பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த பயிற்சியாளர்கள் பங்கேற்று பயன் பெறலாம் என ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT