தேனி மாவட்ட காவல் கண் காணிப்பாளர் பிரவின் உமேஷ் டோங்கரே வெளியிட்ட செய்திக் குறிப்பு: மதுவிலக்கு குற்றச் செயல்களில் பறிமுதல் செய்யப்பட்ட 65 இருசக்கர வாகனங்கள், 2 மூன்று சக்கர வாகனங்கள் ஆகியவை பொது ஏலத்தில் விடப்பட உள்ளன. தற்போது இந்த வாகனங்கள் தேனி, உத்தமபாளையம் மதுவிலக்கு காவல்நிலையங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இவற்றை இன்று முதல் (செப்.26) அக்.5 வரை பொதுமக்கள் பார்வை யிடலாம்.
தேனி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் அக்.6-ம் தேதி ஏலம் நடைபெறும். மேலும் விவரங்களுக்கு 04546-250024, 04554-266230 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.