Regional02

ஆன்லைன் மருந்து வர்த்தகத்தை தடை செய்ய வலியுறுத்தல் :

செய்திப்பிரிவு

கரூர் மாவட்ட மருந்தாளுநர் சங்கம் சார்பில், உலக மருந்தாளுநர்கள் தின கலந்தாய்வுக் கூட்டம் கரூரில் நேற்று நடைபெற்றது. இதில், திருக்குறள் பேரவைச் செயலாளர் மேலை பழநியப்பன், வள்ளியப்பன், சேகர், பாபு, அபுதாஹிர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில், ஆன்லைன் மருந்து வர்த்தகத்தை முற்றிலுமாக தடை செய்யவேண்டும். மருந்தாளுநர்கள் மட்டுமே மருந்துக் கடை நடத்த தகுதி வாய்ந்தவர்களாக அறிவிக்க வேண்டும். அரசு மருத்துவமனை, சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள மருந்தாளுநர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். தமிழகத்தில் மருந்தாளுநர் முதலுதவி மையங்கள் அமைத்து பணியாற்ற அரசு ஆணை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

SCROLL FOR NEXT