Regional03

கார் ஓட்டுநரை கொன்றவர் கைது :

செய்திப்பிரிவு

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக் கோட்டை அருகே பொன்னவரா யன்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் புண்ணியமூர்த்தி(42), கார் ஓட்டுநர். இவர் நேற்று முன்தினம் இரவு தனது நண்பரின் பிறந்தநாளை முன்னிட்டு, சக நண்பர்களுடன் சேர்ந்து கேக் வெட்டி, மது அருந்தி கொண்டாடி உள்ளார். அப்போது, கொண்டாட்டத்தில் பங்கேற்ற அதே பகுதியைச் சேர்ந்த சரவணன்(34) என்பவருக்கும், புண்ணியமூர்த்திக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அவர்களை சக நண்பர்கள் சமாதானப்படுத்தி, அனுப்பிவைத்தனர். பின்னர், தன் வீட்டுத் திண்ணையில் படுத்திருந்த புண்ணியமூர்த் தியை சரவணன் கத்தியால் குத்தி விட்டு தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதில், புண்ணி யமூர்த்தி உயிரிழந்தார். சரவ ணனை பட்டுக்கோட்டை தாலுகா போலீஸார் கைது செய்தனர்.

SCROLL FOR NEXT