Regional03

தூத்துக்குடி கடற்கரையில் - மீன் வளக்கல்லூரி மாணவர்கள் தூய்மைப்பணி :

செய்திப்பிரிவு

கடற்கரையை தூய்மையாக வைத்துக்கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சர்வதேச கடலோர தூய்மை தினம் கடந்த ஒரு வாரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. டாக்டர் ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் கீழ் தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் மீன்வளக் கல்லூரி மாணவ,மாணவிகள் தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையை தூய்மை செய்யும் பணியில் நேற்று காலையில் ஈடுபட்டனர். மீன்வளக் கல்லூரிமுதல்வர் சாந்தகுமார் தலைமையில், தூத்துக்குடி மாவட்ட உதவிஆட்சியர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் இப்பணியை தொடங்கி வைத்தார். விழிப்புணர்வு ஏற்படுத்தும்வகையில் துண்டுப்பிரசுரங்கள் பொதுமக்களிடம் வழங்கப் பட்டன.

SCROLL FOR NEXT