Regional03

உழவன் செயலி பயன்படுத்த விவசாயிகளுக்கு அறிவுறுத்தல் :

செய்திப்பிரிவு

திருநெல்வேலி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் இரா.கஜேந்திர பாண்டியன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

திருநெல்வேலி மாவட்டத்தி லுள்ள விவசாயிகள் வேளாண்மை,தோட்டக்கலை, வேளாண் வணிகம்மற்றும் வேளாண்மை பொறியியல்துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த விவரங்களை தெரிந்து கொள்ள ஏதுவாகஉழவன்செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த செயலியை ஆன்ட்ராய்டு செல்போனில் உள்ளபிளே ஸ்டோர் மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். அதில் விவசாயிகள் பெயர், முகவரி, செல்போன் எண் மற்றும் இதர விவரங்களை பதிவுசெய்து பயன்படுத்தலாம்.

இந்த உழவன் செயலி மூலம் விவசாயிகள் தங்கள் பகுதியிலுள்ள உதவி வேளாண்மை அலுவலர், உதவி தோட்டக்கலை அலுவலர், துணை வேளாண்மை அலுவலர், வேளாண்மை அலுவலர் மற்றும் தோட்டக்கலை அலுவலர் குறித்த விவரங்களையும், அவர்கள் வருகைதரும் நாட்களையும் அறிந்துகொள்ள முடியும்.

மேலும், தோட்டக்கலை மற்றும் வேளாண்மை பொறியியல் துறைகள் சார்ந்த மானிய திட்டங்கள், இடுபொருட்கள் முன்பதிவு, பயிர்காப்பீடு விவரம், உரங்கள் இருப்பு,வேளாண் இயந்திரங்கள் வாடகைமையம், சந்தை விலை நிலவரம்,வானிலை அறிவுரை, பண்ணை வழிகாட்டி, இயற்கை வேளாண்மை பொருட்கள் விவரம், அணை நீர்மட்டம், வேளாண்மை செய்திகள், பூச்சி நோய் கண்காணிப்பு மற்றும்பரிந்துரை, உழவன் இ-சந்தை மற்றும் வேளாண்மை நிதிநிலை அறிக்கை உள்ளிட்ட 19 வகையானவிவரங்களை அறிந்துகொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT