தமிழகத்தில் நகராட்சி, மாநகராட்சி பணியாளர்களின் குழந்தைகளில் 10 மற்றும் 12-ம் வகுப்புபொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவோருக்கு ஆண்டுதோறும் பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாண்டுக்கான பரிசளிப்பு விழா பாளையங்கோட்டையிலுள்ள மாநகராட்சி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
மாநகராட்சி கூட்டமைப்பின் தலைவர் வி.ராதாகிருஷ்ணன், நகராட்சி கூட்டமைப்பின் தலைவர் வ.பாலசந்தர் தலைமை வகித்தனர். நகராட்சி மற்றும் மாநகராட்சி கூட்டமைப்பின் மாநில பொதுச் செயலாளர் இரா.சீத்தாராமன் வரவேற்றார். 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியருக்கு திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர் பா.விஷ்ணு சந்திரன் பரிசு வழங்கினார்.