திருநெல்வேலி மாநகராட்சி தச்சநல்லூர் மண்டல பகுதிகளில் மழை நீர் ஓடைகளில் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது.
மாநகராட்சி ஆணையர் உத்தரவுப்படி மழைக் காலத்தில் ஓடைகளில் அடைப்புகள் ஏற்படாமல் இருக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் ஓடைகளை தூர்வாரி செப்பனிடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்தவகையில் 100-க்கும்மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் தச்சநல்லூர் செல்வவிக்னேஷ் நகர், முல்லைநகர், கோகுல்நகர் பகுதிகளில் கழிவுநீர் ஓடைகளை சுத்தம் செய்யும் பணிகளை மேற்கொண்டனர். சுகாதார அலுவலர்கள் பெருமாள், கிருஷ்ணன் உள்ளிட்டோர் ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.