தி.மலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற்ற தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்றவர்கள். 
Regional03

தி.மலையில் 382 பேருக்கு : பணி நியமன ஆணை வழங்கல் :

செய்திப்பிரிவு

தி.மலை மாவட்ட நிர்வாகம் மற்றும் தி.மலை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை நேற்று நடத்தியது. தி.மலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற்ற முகாமில் 20-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்றன.

தி.மலை மாவட்டத்தைச் சேர்ந்த ஐடிஐ, டிப்ளமோ, பொறியியல் உள்ளிட்ட 1,144 பட்டதாரிகள் கலந்துகொண்டனர். அவர்களில் 382 பேர் தேர்வு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மூலம் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. சென்னை மண்டல வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இணை இயக்குநர் சந்திரன் பணி நியமன ஆணைகளை வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் யோகலட்சுமி செய்திருந்தார்.

SCROLL FOR NEXT