Regional02

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு - தனியார் நிறுவன ஊழியர்கள் தர்ணா : தேர்தலை புறக்கணிக்கப் போவதாகவும் அறிவிப்பு

செய்திப்பிரிவு

தனியார் நிறுவன தொழிலாளர்கள் 11 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து தொழிலாளர்கள் பலர், காஞ்சிபுரம் மாவட்டஆட்சியர் அலுவலகம் முன்பு,தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.அவர்கள் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் பகுதியில் தனியார் செல்போன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை மற்றும் பெயின்ட் தயாரிக்கும்தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இந்தத் தொழிற்சாலைகளில் புதிதாக தொழிற்சங்கம்தொடங்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக 11 ஊழியர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து பணியிடை நீக்கம் செய்யப்பட்ட 11 தொழிலாளர்களை மீண்டும் பணியில் சேர்க்கக் கோரியும், புதிதாக தொடங்கப்பட்ட தொழிற்சங்கத்தை அங்கீகரிக்க கோரியும் கடந்த 16 நாட்களாக தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். ஆனால் தொழிற்சங்க நிர்வாகம், எந்த நடவடிக்கையும் எடுக்காததால் நேற்று200-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்கப் போவதாக கோஷங்களை எழுப்பினர். இதனைத் தொடர்ந்து அவர்களை போலீஸார் கைது செய்து, மாலையில் விடுவித்தனர்.

SCROLL FOR NEXT