புதுவையில் இருந்து தமிழகப் பகுதிக்கு காரில் கடத்தி வரப்பட்ட மது பாட்டில்கள். படம்: எம்.சாம்ராஜ் 
Regional03

மது கடத்திய இருவர் கைது :

செய்திப்பிரிவு

கோட்டக்குப்பம் போலீஸார் நேற்று அதிகாலை பொம்மையார்பாளையம் அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்றை நிறுத்தி சோதனை செய்தபோது, காரில் 1,128 மது பாட்டில்கள் புதுச்சேரியிலிருந்து கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது. காரில் வந்த மரக்காணம் அருகே கந்தாடு பகுதியைச் சேர்ந்த ஏழுமலை மகன் சுடர்வண்ணன்(33), முத்து மகன் சதீஷ்(33) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் மது பாட்டில்களுடன் காரை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்டவைகளின் மதிப்பு ரூ 5 லட்சம் என்று போலீஸார் தெரிவிக்கின்றனர்.

SCROLL FOR NEXT