Regional01

பெண்ணை கொன்ற வழக்கில் மூவர் கைது :

செய்திப்பிரிவு

தாடிக்கொம்பு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்து தேடிவந்த நிலையில் செம்பட்டி அருகே மேட்டுப்பட்டியைச் சேர்ந்த அய்யனார் (21), திண்டுக்கல் அருகே கரட்டழகன்பட்டியைச் சேர்ந்த தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் தென் மண்டலச் செயலாளர் பெ.நடராஜன் (45), செம்பட்டி சீவல்சரகு பகுதியைச் சேர்ந்த பூபாலன் (21) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். மூவரும் நேற்று காலை திண்டுக்கல் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 2-ல் மாஜிஸ்திரேட் கார்த்திக் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். 15 நாள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டதையடுத்து அவர்கள் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

SCROLL FOR NEXT