தேனி நாடார் சரசுவதி கல்வியியல் கல்லூரியில் மாணவிகளுக்கான புத்தாக்கப் பயிற்சி நடந்தது.
தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை பொதுச் செயலாளர் டி.ராஜமோகன் தலைமை வகித்தார். பொருளாளர் எம்.பழனியப்பன் முன்னிலை வகித்தார். முதல்வர் ஜே.பியூலா ராஜினி வரவேற்றார்.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தன்னம்பிக்கை பயிற்றுநர் ஜி.எம்.பிரவீன் பேசுகையில், கல்வியின் மூலம் அனைத்து திறன்களையும் பெறலாம். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் லட்சியத்தை அடையலாம் என்று பேசினார்.
கல்லூரிச் செயலாளர் கே.ஜே.தில்லைக்கனி, இணைச் செயலாளர் எஸ்.கனகராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாணவிகள் ஆர்.வி.ரோசிபா, எஸ்.கமலி, எம்.யுவராணி ஆகியோர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர். பேராசிரியர் எம்.ஜீவிதா நன்றி கூறினார்.