Regional02

ஆடு மேட்டர் வரும் வீரா . . . - சேலத்தில் ஒரேநாளில் 105 ரவுடிகள் கைது :

செய்திப்பிரிவு

சேலம் மாவட்டத்தில் போலீஸார் விடிய விடிய நடத்திய சோதனையில் 105 ரவுடிகளை கைது செய்தனர்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பராமரிக்க வேண்டி கொலை, கொள்ளை, பலாத்காரம், ரவுடித்தனத்தில் ஈடுபடுபவர்களை கைது செய்ய, டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, மாநிலம் முழுவதும் நேற்று போலீஸார் ரவுடிகளை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

சேலம் மாநகர காவல் ஆணையர் நஜ்முல்ஹோடா தலைமையில் மாநகர பகுதியில் போலீஸார் விடிய விடிய ரவுடிகளை கைது செய்யும் நடவடிக்கை மேற்கொண்டனர். சிலர் வீடுகளில் இருந்து தப்பி தலைமறைவாகினர். பழைய ரவுடிகள், கொலை, கொள்ளை, வழிப்பறியில் ஈடுபட்டு ஜாமினில் வெளியே சுற்றிய ரவுடிகளை போலீஸார் கைது செய்தனர். மாநகரப் பகுதியில் 73 ரவுடிகளை போலீஸார் கைது செய்தனர்.

இதுபோல மாவட்ட எஸ்பி ஸ்ரீஅபிநவ் தலைமையில் மாவட்ட பகுதியில் போலீஸார் நடத்திய சோதனையில் 32 ரவுடிகளை கைது செய்தனர். மாவட்டம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 105 ரவுடிகளை போலீஸார் கைது செய்து, அவர்களை சிறையில் அடைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT