Regional02

மத்திய அரசைக் கண்டித்து சேலத்தில் தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம் :

செய்திப்பிரிவு

மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி சேலத்தில் 5 இடங்களில் தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சேலம் சூரமங்கலத்தில், தொழிலாளர் முன்னேற்ற சங்கம், ஏஐடியுசி தொழிற்சங்கத்தினர் வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் முழக்கமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேபோல, ஐந்து ரோடு, அஸ்தம்பட்டி, பால்மார்க்கெட், அம்மாப்பேட்டை ஆகிய இடங்களிலும் தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும், பொதுத்துறை சொத்துக்களை தனியாருக்கு தாரை வார்ப்பதை தடுக்க வேண்டும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாய விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு தியாகராஜன், தொழிலாளர் முன்னேற்ற சங்க துணைத் தலைவர் பசுபதி, ஏஐடியுசி முனுசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT