ஈரோட்டில் தலைமறைவாக இருந்த 13 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.
ஈரோடு மாவட்டத்தில் குற்றச் சம்பவங்களை தடுக்கும் வகையில், ஈரோடு எஸ்பி சசிமோகன் தலைமையில் நேற்று முன்தினம் இரவு தீவிர கண்காணிப்பு மற்றும் அதிரடி தேடுதல் வேட்டை நடைபெற்றது.
இதில், பிடியாணை பிறப்பிக்கப்பட்டு, தலைமறைவாக இருந்த 13 ரவுடிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதேபோல், சந்தேக நபர்கள் 37 பேர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டனர்.
1658 வழக்குகள் பதிவு
மாவட்டம் முழுவதும் உள்ள 288 தங்கும் விடுதிகள் மற்றும் திருமண மண்டபங்களிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. மாவட்டம் முழுவதும் செய்யப்பட்ட தீவிர வாகன சோதனையில் ஒரே நாள் இரவில் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய 1,658 வாகனங்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. இதுதவிர உரிய ஆவணங்களின்றி இருந்த 20 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.