Regional02

அரசுப் பணியில் ஆண்களுக்கும் இடஒதுக்கீடு கோரி திருப்பூர் ஆட்சியரிடம் மனு :

செய்திப்பிரிவு

அரசு போட்டித் தேர்வு எழுதும் ஆண் தேர்வர்கள் 25-க்கும் மேற்பட்டோர், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் சு.வினீத்தை சந்தித்து ஒரு மனு அளித்தனர். அதில், “தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுக்கு தயாராகிவருகிறோம். இந்நிலையில், அரசுப் பணியில் பெண்களுக்கு 40 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

மாநிலத்தில் ஏற்கெனவே சமூகநீதி கோட்பாடு பின்பற்றப்பட்டு வருகிறது. பெண்களுக்கு 40 சதவீதம் ஒதுக்கீடு வழங்கப்படும் பட்சத்தில், மீதமுள்ள 60 சதவீத பொது ஒதுக்கீட்டிலும் பெண்கள் பணி வாய்ப்பு பெற முடியும். இதனால் ஆண்களின் அரசுப் பணி கனவு பறிபோகும் நிலை ஏற்படும். எனவே, பெண்களுக்கான இடஒதுக்கீடு சட்ட மசோதாவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். ஆண்களுக்கும், பெண்களுக்கும் சரிசமமாக இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT