இன்றைய செய்தி

விருத்தாசலத்தில் ஊராட்சி மன்றத் தலைவர்கள் ஆர்ப்பாட்டம் :

செய்திப்பிரிவு

விருத்தாசலம் ஊராட்சி ஒன்றியத்தில், தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட பணிகளில் லஞ்சம் பெற்றுக் கொண்டு குறிப்பிட்ட ஊராட்சிகளுக்கு மட்டும் பணி ஆணை வழங்குவதாக கூறியும், வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயக்குமாரியை கண்டித்தும் நேற்று விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஊராட்சி மன்ற தலைவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயக்குமாரியை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்று முழக்கங்கள் எழுப்பினர்.

SCROLL FOR NEXT