Regional01

கதம்ப வண்டு கொட்டி 11 பெண்கள் காயம் :

செய்திப்பிரிவு

சிவகங்கை அருகே ஒய்ய வந்தானில் நாகராஜன் என் பவரது தோட்டத்தில் அதே பகுதியைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட பெண்கள் நிலக்கடலை பறித்துக் கொண்டிருந்தனர். அப்போது புதரில் இருந்து வெளியே வந்த கதம்ப வண்டுகள் இவர்களை கொட்டின.

இதில் தாளையம்மாள், நீலாவதி, முத்தாலம்மாள், செல் லம்மாள், கிருஷ்ணவேனி, மணி மேகலை, பூங்கோதை, அமுதா, காளியம்மை, இருளாயி உட்பட 11 பெண்கள் காயமடைந்தனர். இவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர் களுக்கு தீவிர சிகிச்சை அளிக் கப்படுகிறது.

இது குறித்து காளையார் கோவில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT