Regional02

மதுரை ஐராவதநல்லூரில் சாலையை விரிவுபடுத்தும்போது கி

செய்திப்பிரிவு

மதுரை ஐராவதநல்லூரில் சாலையை விரிவுபடுத்தும்போது கி.பி. 10-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சதுர வடிவ சிவலிங்கம் சிலை கிடைத்தது.

மதுரை தெப்பக்குளம் முதல் விரகனூர் வரை 60 அடி சாலை அமைக்கும் பணி நடைபெறுகிறது. ஐராவதநல்லூர் இந்திரா காந்தி சிலை அருகே கொந்தகை கால்வாய் அருகே உள்ள சாலையை நேற்று முன்தினம் இரவு தோண்டினர். அப்போது 2 அடி உயரம் உள்ள சிவலிங்க கல் சிலை கிடைத்தது. இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் சிலைக்கு மாலை அணிவித்து வழிபட்டனர். ஐராவதநல்லூர் கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ் இச்சிலையை தெற்கு தாலுகா அலுவலகத்துக்கு கொண்டு சென்றார். அங்கிருந்து மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கப்பட்டது. இது குறித்து அருங்காட்சியகக் காப்பாளர் மருதுபாண்டி கூறுகையில், சங்க இலக்கியங்களில் கந்து (தூண்) வழிபாடு இருந்தது. ஆரம்பத்தில் மரத்தாலான தூண்களில் வழிபாடு செய்யப்பட்டுள்ளது. பின்னர் கல் தூண் வடிவ வழிபாடு இருந்தது. இதன் எச்சம்தான் சிவலிங்க வழிபாடாக மாறியுள்ளது. இந்த சதுர வடிவ சிவலிங்கம் சிலை கி.பி.10, 11-ம் நூற்றாண்டுகளில் பயன்பாட்டில் இருந்துள்ளது என்றார்.

SCROLL FOR NEXT