சிவகங்கை மாவட்டத்தில் மேலும் 37 ரவுடிகளை போலீஸார் கைது செய்தனர்.
சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களில் அடுத்தடுத்து 8 கொலைகள் நடந்தன. இதையடுத்து மாவட்ட எஸ்பி செந்தில்குமார் உத்தரவில் மாவட்டம் முழுவதும் கடந்த மூன்று நாட்களாக போலீஸார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
தொடர்ந்து குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட ரவுடிகளை கைது செய்து வருகின்றனர். நேற்றுமுன்தினம் 22 ரவுடிகளை கைது செய்தநிலையில், நேற்று மேலும் 37 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். இதன் மூலம் ரவுடியிசம் முற்றிலும் ஒழிக்கப்படும் என எஸ்பி செந்தில்குமார் தெரிவித்தார்.