Regional01

மத்திய அரசைக் கண்டித்து - அரசுப் போக்குவரத்துக் கழக தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் :

செய்திப்பிரிவு

வேளாண் சட்டங்கள், மோட்டார் வாகன திருத்தச் சட்டம், குடியுரிமைச் சட்டம் ஆகியவற்றை ரத்து செய்ய வேண்டும். பெட்ரோல்- டீசல்- காஸ் விலையைக் குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய சங்கங்கள் செப். 27-ல் முழு வேலைநிறுத்த போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன. இந்தப் போராட்டத்துக்கு பல்வேறு எதிர்க்கட்சிகள், அமைப்புகள் ஆகியவற்றிடம் விவசாய அமைப்புகள் ஆதரவு கோரி வருகின்றன.

இந்த வேலைநிறுத்த போராட்டத்தை விளக்கி திருச்சி மாவட்டத்தில் உள்ள போக்குவரத்துக் கழக பணிமனைகள் முன்பு தொழிற்சங்கங்கள் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், தொமுச, சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியுசி, டிடிஎஸ்எப், ஹெச்எம்எஸ், ஏஏஎல்எல்எப், எம்எல்எப் உள்ளிட்ட தொழிற்சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

இதேபோல, அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசுப் போக்குவரத்து பணிமனை முன் தொமுச கிளைத் தலைவர் கொளஞ்சி, பெரம்பலூர் மாவட்டம் துறைமங்கலத்தில் உள்ள அரசுப் போக்கு வரத்துக் கழக பணிமனை முன் தொமுச கிளைச் செயலாளர் குமார், புதுக்கோட்டை அரசுப் போக்குவரத்துக் கழக மண்டல அலுவலகம் அருகில் தொமுச அமைப்புச் செயலாளர் ஐ.ஆரோக்கியம், கரூரில் அரசுப் போக்குவரத்துக் கழக மண்டல அலுவலகம் முன் தொமுச அண்ணா வேலு, கும்பகோணம் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை முன் தொமுச மத்திய மாவட்ட சங்கத் தலைவர் சரவணன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அனைத்து தொழிற்சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT