காஞ்சிபுரம் மாவட்டம் தாமல் ஊராட்சியில் ஊரக உள்ளாட்சி தேர்தலையொட்டி நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை, ஆட்சியர் மா.ஆர்த்தி தொடங்கி வைத்தார். 
Regional02

ஊரக உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் :

செய்திப்பிரிவு

காஞ்சிபுரம் மாவட்டம் தாமல் ஊராட்சியில் ஊரக உள்ளாட்சி தேர்தலையொட்டி அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியை மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதேபோல் தாமல் ஊராட்சியில் ஊரக உள்ளாட்சி தேர்தலையொட்டி மாதிரி வாக்குச் சாவடி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் பொதுமக்கள் பலர் வாக்களிப்பது குறித்தும் தெரிந்து கொண்டனர். மேலும் காஸ் சிலிண்டரில் தேர்தல் விழிப்புணர்வு வில்லைகளை ஒட்டியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பி.தேவி, மகளிர் திட்ட இயக்குநர் சீனுவாச ராவ், உணவு பாதுகாப்பு அலுவலர் அனுராதா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT