கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகம் எதிரே போராட்டத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள். 
Regional02

வகுப்பறை கட்டி தரக்கோரி கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகத்தை மாணவர்கள் முற்றுகை :

செய்திப்பிரிவு

கள்ளக்குறிச்சியை அடுத்த சிறுவங்கூரில் அரசுக் கலைக் கல்லூரி கடந்த 2011-ம்ஆண்டு முதல் இயங்கி வந்தது.

இந்நிலையில் கள்ளக்குறிச்சி மருத்துவமனை கடந்த ஆண்டு தொடங்கப்பட்டதால், கலைக் கல்லூரி கட்டிடங்கள், மருத்து வக் கல்லூரிக் கட்டிடங்களாக மாற்றப் பட்டன.

கலைக் கல்லூரி ஏமப்பேர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக் கட்டிடத்திற்கு மாற்றப்பட்டது. கடந்த இரு ஆண்டுகளாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டிருந்ததால், வகுப்பறை குறித்து யாரும் யோசிக்கவில்லை. இந்நிலையில் மேல்நிலைப் பள்ளி வகுப்புகளும், கல்லூரிகளும் திறக்கப்பட்டு ஒரு மாதம் நிறைவடையும் நிலைஉள்ளது. ஆனால் கல்லூரி மாணவர்களுக்கு போதிய வகுப்பறைகள் இல்லாமல் மரத்தடியில் வகுப்புகள் நடைபெறுகின்றன. இதனால் விரக்தியடைந்த மாணவர்கள் கல்லூரிக் கென தனிக் கட்டிடம் கட்டித் தரக்கோரி நேற்று ஆட்சியர் அலுவலகத்தை முற்று கையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறையினர் சமாதானப்படுத்தி கலைந்து போகச் செய்தனர்.

SCROLL FOR NEXT