மோகனூர் அடுத்த மாடகாசம்பட்டி ஊராட்சி ராசாம்பாளையத்தில் ஆக்கிரமிப்பு குடியிருப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட அப்பகுதி மக்கள். 
Regional01

மோகனூர் அருகே ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு :

செய்திப்பிரிவு

மோகனூர் அருகே புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்ட குடியிருப்புகளை அகற்ற அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மோகனூர் அடுத்த மாடகாசம்பட்டி ஊராட்சி ராசாம்பாளையம் அருந்ததியர் காலனியில் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலத்தில் அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் குடிசை போட்டு தற்காலிக குடியிருப்பாக மாற்றினர். இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற மோகனூர் வட்டாட்சியர் தங்கராஜ் உத்தரவிட்டார். இதற்கு அங்கு வசிக்கும் மக்கள் அவகாசம் கேட்டனர்.

இந்நிலையில், நேற்று வருவாய்த் துறை அதிகாரிகள் ஜேசிபி மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை மேற்கொண்டனர். இதற்கு அப்பகுதி மக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், ஆதித்தமிழர் பேரவைக் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து அங்கு சென்ற போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவாரத்தை நடத்தினர். எனினும், போராட்டம் தொடர்ந்தது. இதனால், ஆக்கிரமிப்பு அகற்றும் பணி பாதியில் நிறுத்தப்பட்டது.

SCROLL FOR NEXT