கரூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு நேற்று மனு அளிக்க வந்த அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அக்னிச் சிறகுகள் ஆட்டோ நிறுத்தத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்கள். 
Regional01

தனியார் மினி பேருந்துகள் இயக்கம் குறித்து ஆய்வு செய்யும்படி ஆட்டோ ஓட்டுநர்கள் மனு :

செய்திப்பிரிவு

கரூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், வட்டார போக்குவரத்து அலுவலர் ஆனந்திடம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அக்னிச் சிறகுகள் ஆட்டோ நிறுத்தத்தைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் நேற்று அளித்த மனு:

கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆட்டோ நிறுத்தத்தில் 30-க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் ஆட்டோக்களை இயக்கி வருகின்றனர். இங்கு, தற்போது 5 தனியார் மினி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இவை நீண்ட நேரம் காத்திருந்து பயணிகளை ஏற்றிச் செல்கின்றன. இந்தப் பேருந்துகளுக்கு முறையான அனுமதி உள்ளதா? என தெரியவில்லை. மேலும், இவற்றின் ஓட்டுநர்கள் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையின் நடுவே வாகனங்களை நிறுத்துவதுடன், அதிக ஹாரன் சப்தம் எழுப்பியபடி வாகனங்களை இயக்கி வருகின்றனர். எனவே, இந்த மினி பேருந்துகளுக்கு முறையான அனுமதி உள்ளதா? என ஆய்வு செய்து, ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT