Regional01

வள்ளியூர் அருகே சீலாத்திகுளம் கிராமத்தில் - வீட்டு மேற்கூரை இடிந்து விழுந்து சிறுவன் மரணம் :

செய்திப்பிரிவு

வள்ளியூர் அருகே வீட்டு மேற் கூரை இடிந்து விழுந்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வள்ளியூர் அருகேயுள்ள சீலாத்திகுளத்தில் கூலித்தொழி லாளி முருகன் என்பவரது வீட்டின் மேற்கூரை நேற்று பிற்பகலில் திடீரென்று இடிந்து விழுந்தது. இதில் வீட்டிலிருந்த அவரது மகன் ஆகாஷ் (3) பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சீலாத்திகுளம் அருகே கல்குவாரியில் பாறைகளை வெடி வைத்து தகர்த்தபோது ஏற்பட்ட அதிர்வால், வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். வள்ளியூர் ஏஎஸ்பி சமயசிங் மீனா தலைமையிலான போலீஸாரும், ராதாபுரம் வட்டாட்சியர் ஏசுதாசன் உள்ளிட்ட அதிகாரிகளும் அங்கு சென்று பொதுமக்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அதன் பின் சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

SCROLL FOR NEXT