திருச்செந்தூரில் நடைபெற்ற விழாவில் கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு சீதனங்களை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் வழங்கினார். 
Regional02

350 பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி :

செய்திப்பிரிவு

திருச்செந்தூர் மற்றும் உடன்குடியில் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் சார்பில், சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில், 350 கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு சீதனங்களை, தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் வழங்கினார். கர்ப்பிணி பெண்களுக்கு 5 வகையான கலவை சாதங்களை பரிமாறினார்.

அமைச்சர் பேசியதாவது, ``எல்லா விதத்திலும் மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற வகையில் தமிழக முதல்வர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். கர்ப்பிணி தாய்மார்கள் தங்கள் உடல் நலனின் அக்கறை செலுத்தி குழந்தைகளை ஆரோக்கியமாக பெற்றெடுக்க வேண்டும்” என்றார் அமைச்சர்.

திருச்செந்தூர் ஏஎஸ்பி ஹர்ஷ்சிங், கோட்டாட்சியர் மு.கோகிலா, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட மாவட்ட அலுவலர் தனலெட்சுமி, வட்டாட்சியர் முருகேசன், உடன்குடி ஒன்றியக்குழு தலைவர் பாலசிங், திமுக மாநில மாணவரணி துணை அமைப்பாளர் உமரிசங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT