Regional01

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் - எடப்பாடி பழனிசாமி இன்று நிர்வாகிகளுடன் ஆலோசனை :

செய்திப்பிரிவு

தமிழகத்தில் வேலூர், திருப் பத்தூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருநெல் வேலி மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அடுத்த மாதம் 6-ம் தேதி மற்றும் 9-ம் தேதிகளில் 2 கட்டகளாக நடைபெற உள்ளது.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களை கடந்த 15-ம் தேதி முதல் தாக்கல் செய்து வரு கின்றனர். நேற்று மாலை 5 மணியுடன் வேட்பு மனுதாக்கல் நிறைவடைந்தது. வேட்பு மனுக் கள் மீதான பரிசீலினை இன்று நடைபெறுகிறது. வரும் 25-ம் தேதி மனுக்களை வாபஸ் பெறலாம்.

இந்நிலையில், அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்த அறிவிப்பை கட்சி தலைமை சமீபத்தில் அறிவித்தது. இதனைத்தொடர்ந்து தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட் பாளர்கள் தங்களது வேட்பு மனுக் களை தாக்கல் செய்தனர்.

இந்நிலையில், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் அதிமுக நிர்வாகிகளுடனான ஆலோ சனைக்கூட்டம் இன்று நடைபெறு கிறது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக எடப்பாடி பழனி சாமி இன்று காலை 10 மணிக்கு திருப்பத்தூர் வருகிறார்.

திருப்பத்தூர் - கிருஷ்ணகிரி சாலையில் உள்ள ‘ஓட்டல் ஹீல்ஸில்’ நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்துகிறார்.

இதில், முன்னாள் அமைச்சரும், திருப்பத்தூர் மாவட்டச் செயலாளருமான கே.சி வீரமணி, நகரச் செயலாளர் டி.டி.குமார், முன்னாள் எம்எல்ஏ கே.ஜி.ரமேஷ், வாணியம்பாடி எம்எல்ஏ செந்தில் குமார் உட்பட பலர் கலந்து கொள்கின்றனர்.

இதனைத்தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி வேலூர் வருகிறார். காட்பாடி காந்திநகரில் உள்ள ஆக்சீலியம் மகளிர் கல்லூரி அருகே உள்ள பார்ச்சூன் ஐடிசி நட்சத்திர ஓட்டலில் பகல் 12 மணிக்கு வேலூர் மாவட்ட அதிமுக நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்துகிறார்.

இதில், மாவட்டச் செயலாளர் கள் எஸ்.ஆர்.கே.அப்பு (மாநகரம்) வேலழகன் (புறநகர்), பொருளா ளர் எம்.மூர்த்தி மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொள் கின்றனர்.

மாலை 4 மணிக்கு வாலாஜா தங்க ராஜா பேலஸ் திருமண மண்டபத்தில் ராணிப்பேட்டை மாவட்ட அதிமுக நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி தேர்தல் தொடர்பான ஆலோசனை நடத்துகிறார். இதில் மாவட்டச் செயலாளரும், அரக்கோணம் எம்எல்ஏவுமான சு.ரவி உட்பட பலர் கலந்து கொள்கின்றனர்.

SCROLL FOR NEXT